முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சாம்பியன்ஸ் டிராபி... 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

நிதான ஆட்டம்... 

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பில் சால்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ஜேமி ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், பென் டக்கெட் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

179 ரன்களுக்கு ஆல் அவுட்...

ஜோ ரூட் 44 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் போல்டானார். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஹாரி ப்ரூக் 19 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 21 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 9 ரன்கள், ஜேமி ஓவர்டான் 11 ரன்கள், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து