முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்றியுணர்வு மற்றும் பக்தியின் அடையாளம் ரம்ஜான் நோன்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      இந்தியா
Modi-2024-05-07

Source: provided

புதுடெல்லி : ரம்ஜான் நோன்பு நேற்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்திக்கு அடையாளமாக இருக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவை செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய மார்க்கத்தின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பை இம்மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோற்க வேண்டுமென குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (மார்ச் 2) ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. இப்புனித ரமலான் மாதத்தில் முழுமையாக அனைத்து நோன்புகளையும் நோற்று, அருள்மறையை அதிகமாக ஓதி, நிறைய வணக் க வழிபாடுகளை புரிந்து, ஏழைகளுக்கு தர்மம் செய்து, நிறைவான இறையருளை பெறக் கூடிய பாக்கியத்தை அருள்வான் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து