முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயோ டெக்னாலாஜி நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
IAS-IPS 2024-03-28

Source: provided

சென்னை : முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது.

நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 20-ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://dbt2025.ntaonline.in/ என்ற இணையதள வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் மார்ச் 5, 6-ம் தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து