முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி நிம்மதியாக இருக்க முடியாது: சீமான் மீது நடிகை சாபம்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

சென்னை: சீமான் இனி நிம்மதியாக  இருக்கமுடியாது என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பெண் என்றும் பாராமல் படு ஆபாசமாக பேசினார்.  சீமான் பேசியதில் பல வார்த்தைகளை ஊடகங்கள் மியூட் செய்து ஒளிப்பரப்பும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. சீமானின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதேபோல் பெண் அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள் நீங்கள் நீதிபதியாக என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தநிலையில், என்னுடைய கண்ணீர் சும்மா விடாது. சீமான் இனி நன்றாக இருக்க மாட்டார். இனி நிம்மதியாக சீமான் இருக்கமுடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்யப்போகிறது என்று பார் என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார். பாலியல் தொழிலாளி என சீமான் விமர்சனம் செய்த நிலையில் நடிகை கண்ணீருடன் நடிகை சாபம் விட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து