முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      இந்தியா
10-th 2024-03-26

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் 102 தனியார் பள்ளிகளில் படிக்கும் மற்றும் தனி தேர்வர்கள் 8,105 ஆயிரம் பேருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு  இன்று தொடங்குகிறது.

புதுச்சேரியில் தனிகல்வி வாரியம் இல்லை. தமிழக அரசு பாடத்திட்டத்தையே அவர்களும் பின்பற்றி வந்தனர். இந்தநிலையில் அங்கு அரசுப்பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதல் வகுப்பிலிருந்து 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டம் அமலானது. நடப்பு கல்வியாண்டில் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்புகளிலும் சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டம் அமலானது. அதைத்தொடர்ந்து இம்முறை சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

அதேபோல் பல தனியார் பள்ளிகளும் வேறு பாடத்திட்டத்துக்கு மாறத்தொடங்கி விட்டன. ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது அப்பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பாக புதுவை அரசு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொது தேர்வுக்கு தேர்வு துறையால் நாளை (இன்று) 3-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட தேர்வுகால அட்டவணைப்படி பொதுத்தேர்வுகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் நடத்தப்படுகிறது.

புதுவையில் 20 மையங்களும், காரைக்காலில் 5 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நிலையானபடை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து