முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

டிரம்ப் வெளியிட்ட அந்த உத்தரவில், “நமது குடியரசு நிறுவப்பட்டது முதல் ஆங்கிலம் நமது தேசிய மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நமது தேசத்தின் சுதந்திர பிரகடனம், அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய வரலாற்று அரசியல் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையே.

எனவே, ஆங்கிலம் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாகி நீண்ட காலமாகிவிட்டது. தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட ஒரு மொழி ஒருங்கிணைந்த மற்றும் ஒருமித்த சமுதாயத்தின் மையமாகக் கருதப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஒரே மொழி பயன்படுத்தப்படுவது சுதந்திரமான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் குடிமக்களால் மேலும் வலுவடையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ”நமது தேசிய மொழியைக் கற்கவும், ஏற்றுக் கொள்ளவும் புதிய அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவை தனது கனவாகக் கொண்டுள்ளவர்களுக்கான அதிகாரத்தை இது வழங்கும்.

ஆங்கிலம் பேசுவது பொருளாதார வளர்ச்சிக்கானக் கதவுகளைத் திறப்பது மட்டுமின்றி புதியவர்கள் நமது சமூகத்தில் இணையவும் தேசிய மரபுகளில் பங்குகொள்ளவும் உதவுகிறது. ஆங்கிலம் பேசும் பன்மொழி கற்று தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட அடுத்த தலைமுறைக்கு அதனைக் கடத்தும் அமெரிக்க குடிமக்களை இந்த உத்தரவு அங்கீகரித்து கொண்டாடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் 2019 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, கிட்டத்தட்ட 6.8 கோடி மக்கள் தங்களது வீட்டில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பேசுகின்றனர். அமெரிக்காவில் ஆங்கிலம் பெரும்பான்மையான மொழியாக இருந்தாலும், அமெரிக்காவில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டில் ஸ்பானிஷ் பேசுவதாகத் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து