முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியில் மூழ்கச்செய்தன: இளையராஜா நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
Ilayaraja-2024-10-27

Source: provided

சென்னை: முதல்வர் வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி  என இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார். அப்போது, லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்," இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று (நேற்று) நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில், " முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!" என குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து