முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்டி சட்டையில் எம்.எஸ்.டோனி

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      விளையாட்டு
Dhoni 2024-03-12

Source: provided

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.டோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட டோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே டோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.

___________________________________________________________________________

பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

முன்னதாக கடந்த சில சீசன்களாக மகளிரை கவுரவிக்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அந்த வகையில் இந்த சீசனிலும் மே 1-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கான ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினமான நேற்று முன்தினம் நடந்தது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் சங்ககரா அறிமுகம் செய்தார்.

___________________________________________________________________________

இறுதிப்போட்டியை கண்டு ரசித்த மக்கள்

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டி மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில்  நேற்று நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.

இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர்.

___________________________________________________________________________

வேதனையில் ரோகித் சாதனை 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 15-வது டாஸ் தோல்வி இதுவாகும். 

இந்திய கேப்டனாக ரோகித் சர்மா சந்தித்த 12-வது தோல்வியாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாசில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளை சந்தித்த கேப்டன் என்ற மோசமான சாதனையில் பிரையன் லாராவுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக  பீட்டர் போரேன் 11 தோல்விகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

___________________________________________________________________________

பும்ரா குறித்து வில்லியம்சன் 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.  இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில்லியம்சனிடம், உங்கள் கெரியரில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வில்லியம்சன், 'இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராதான் நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்" என்று கூறினார்.

___________________________________________________________________________

ஷமி மோசமான சாதனை 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 74 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2-வது இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதில் உமேஷ் யாதவ் 2013-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் வழங்கியதே முதலிடத்தில் உள்ளது. 

___________________________________________________________________________

வெற்றிக்காக ரசிகர்கள் பூஜை 

 ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.  2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியிருந்தது. 

இதற்கு பதிலடி தரும் வகையில்   இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று  நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள்  எதிர்நோக்கி இருந்தனர். மறுபுறம் சில ரசிகர்கள் இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர். இது குறித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து