முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜா ஓய்வு பெறுகிறார்..?

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

துபாய் : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஜடேஜா? ஜடேஜா செய்த சாதனைகள் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள்... 

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர் தனது பந்துவீச்சை வீசி முடித்த பிறகு நடந்த ஒரு சம்பவம் காரணமாக ரசிகர்கள் அவர் இந்த போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப் போவதாக கூறி வருகின்றனர்.

கட்டி அணைத்தார்...

நேற்றைய இறுதிப்போட்டியில் ஜடேஜா தனது பத்து ஓவர்களையும் வீசி முடித்தபோது, விராட் கோலி அவரது அருகே சென்று கட்டி அணைத்தார். ஜடேஜா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதால் தான் விராட் கோலி அவரை அணைத்து அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் கூறப்படுகிறது. விராட் கோலி ஜடேஜாவை கட்டி அணைத்தது நெகிழ வைக்கும் சம்பவமாக ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டடு வருகிறது. இது ஓய்வு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜடேஜா செய்த சாதனைகள் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அஸ்வீனையும்....

முன்னதாக, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வு முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பு அவரை கோலி கட்டி அணைத்ததை குறிப்பிட்டும், தற்போது ஜடேஜாவை கோலி அணைத்ததையும் சுட்டிக்காட்டி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து