முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி மோசமான சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      விளையாட்டு
Ind-Cricket-1-2025-02-13

Source: provided

துபாய் : நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி  பீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று  (மார்ச் 9) நடைபெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்தது.  

பீல்டிங் மோசம்...

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி வீரர்கள் கொடுத்த 4 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது. இதன் மூலம், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தவறவிட்ட கேட்ச்சுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி தவறவிட்ட அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கை இதுவாகும்.

இந்தியா 3-வது இடம்...

மொத்தம் எட்டு அணிகள் பங்குபெற்ற இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேட்ச்சுகளை தவறவிடுவதன் அடிப்படையில், இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.  பீல்டிங்கில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை விட மட்டுமே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

 வீணான வாய்ப்புகள்.... 

இன்றையப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது. முதல் முறை கிடைத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டார். அதன் பின், கிடைத்த இரண்டாவது வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். டேரில் மிட்செல் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பினை கேப்டன் ரோஹித் சர்மா தவறவிட்டார். கிளன் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தவறவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து