Idhayam Matrimony

ராபர் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      சினிமா
Raber-Review 2025-03-17

Source: provided

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கும் நாயகன் சத்யாவுக்கு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக வழிப்பறி செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார். ஒரு கட்டதில் கொலை செய்யவும் துணிகிறார். இதனால், தொழில் ரீதியான எதிரிகள் அவரை துரத்த,  மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்க அவரை விரட்டுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகன் சத்யா தப்பித்து தனது குற்ற செயல்களை விட்டு விட்டாரா அல்லது தொடர்ந்தாரா? என்பது தான் ‘ராபர் படத்தின் கிளைமாக்ஸ். நாயகன் சத்யா அப்பாவித்தனமான முகத்தோடும், எதார்த்த பேச்சோடு பயணித்து குற்ற செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களுக்கும் பதற்றத்தை கொடுத்து விடுகிறார். சிறையில் கெத்தாக எண்ட்ரி கொடுக்கும் செண்ட்ராயனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது. டேனியல் போப், ஜே.பி, தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு  பலம் சேர்த்திருக்கிறார்கள். என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும், ஜோகன் சிவனேஷின் இசையும் பாராட்டுக்குரியது. ’மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, பார்ப்பபவர்களை பதற வைத்து விடுகிறார். மொத்தத்தில் ராபர் படத்தை ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து