Idhayam Matrimony

சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்புகிறார்: நாசா அறிவிப்பு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      உலகம்
Sunita-Williams 2024-05-06

Source: provided

நாசா : சுனிா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புவார் என்று நாசா அறிவித்துள்ளது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக நேற்று முன்தினம் சென்றடைந்தது.

இந்த டிராகன் விண்கலத்தில் தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷிய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்களுக்கு அடுத்த சில பயிற்சிகளை சுனிதா வில்லியம்ஸ் அளித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 10.45 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் சுனிதா, வில்மோா் ஆகியோருடன் மேலும் 2 விண்வெளி வீரா்கள் பூமிக்கு திரும்பு கிறார்கள். இந்த விண்கலம் இன்று மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்து நேரடியாக நாசா ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து