Idhayam Matrimony

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      இந்தியா
Income-Tax 1

Source: provided

புதுடெல்லி : வருகிற 1-ம் தேதி முதல் புதிய வருான வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. 2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.

பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும். முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்கு களை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார். வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது. வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து