Idhayam Matrimony

தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்: மடிக்கணினி விவகாரத்தில் இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
CM-1 2024-06-24

Source: provided

சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க.  - அ.தி.மு.க.  உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ். எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பொது பட்ஜெட்டும் சனிக்கிழமை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பேரவை நிகழ்வுகள் நேற்று (திங்கள்கிழமை)காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. பேரவைத் தலைவர் அப்பாவு மீதான அ.தி.மு.க. வின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அப்பாவு, பேரவைத் தலைவர் பதவியில் தொடர்ந்து வருகிறார்.

பின்னர், 'கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்' என பட்ஜெட்டில் கூறியது குறித்து தி.மு.க.  - அ.தி.மு.க.  இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் அறிவு வளர்வதற்கும் விஞ்ஞான வளர்சிக்காகவும் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்? 4 ஆண்டுகளாக தி.மு.க.  ஆட்சியில் ஏன் மடிக்கணினி வழங்கவில்லை? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அ.தி.மு.க.  ஆட்சியிலேயே நிறுத்தி விட்டீர்கள். அந்த திட்டத்தைதான் சரிசெய்து தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம். மடிக்கணினி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தது தி.மு.க.  அரசுதான். தி.மு.க.  ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்று கூறினோம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து