Idhayam Matrimony

நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையிலிருந்து வெளியேறினார் அப்பாவு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
Appavu--1

Source: provided

சென்னை : அ.தி.மு.க.  தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா்  அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.

சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றன. சட்டப்பேரவை கூட்டத் தொடா் தேதிகளை இறுதி செய்யபேரவைத் தலைவா்  அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் அவரது அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு மு.அப்பாவு பேசுகையில், என் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அ.தி.மு.க. வினா் அளித்துள்ளனா். அதில், தங்களை அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை எனவும், தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனா் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அ.தி.மு.க.  சார்பில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. செங்கோட்டையன் உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து