Idhayam Matrimony

டாஸ்மாக் முற்றுகை போராட்டம்: அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்கள் கைது

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
Annamalai 2025-03-17

Source: provided

சென்னை : டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.  மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.  

டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க.  சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அண்ணாமலையை, சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

இதனிடையே அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  தி.மு.க.  மாபெரும் தவறு செய்துள்ளது. அதனால் தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஜனநாயக முறையில் போராடினால் தடுக்கிறார்கள். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22 ஆம் தேதி நடக்கலாம் அல்லது வேறு எந்த தேதியிலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதல்வரின் வீடாக கூட இருக்கலாம், டாஸ்மாக்காக இருக்கலாம். முதல்வரும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். அவரும் தப்பிக்க முடியாது.

இந்தியாவிலேயே மிக மோசமான  அரசியல் தலைவர் என்று பார்த்தால் அது செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்று உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. இவர்களெல்லாம் தற்போது நல்லவர்கள் வேஷம் போடுகிறார்கள்.

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டாஸ்மாக் பணத்தை வைத்து தி.மு.க.  தேர்தலை சந்தித்தது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க.  சந்திக்க உள்ளது. ஊழல் செய்யவில்லை என்றால், அவர்கள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும்” எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “ தி.மு.க.  அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பா.ஜ.க.  சார்பில், இன்று (நேற்று) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி தி.மு.க.  அரசு, பா.ஜ.க.  மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, தமிழிசை மற்றும் , மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து