முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      விளையாட்டு
18 Ram 52

Source: provided

ஜெய்ப்பூர்: இந்த ஆண்டு ஐ.பி.எல்.  தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.

ஐ.பி.எல். தொடர்... 

ஐ.பி.எல்.  தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐ.பி.எல்.  தொடருக்கான பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களது அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

விரலில் காயம்... 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, கை விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பின், அவருக்கு கை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த சஞ்சு சாம்சன் ஐ.பி.எல்.  தொடருக்கான பயிற்சிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

பயிற்சி ஆட்டம்...

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: விமான நிலையத்திலிருந்து நேராக அணியின் முதல் பயிற்சி ஆட்டத்துக்காக சஞ்சு சாம்சன் மைதானத்துக்கு வந்து, அவர் எப்போதும் புன்னகையுடன் இருப்பதைப் போன்று அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவைத்துள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல்.  தொடரில் மார்ச் 23 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து