முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஷாட் அடித்த டோனி

புதன்கிழமை, 19 மார்ச் 2025      விளையாட்டு
Dhoni 2024-05-13

Source: provided

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

இதனையடுத்து, வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை அணி வீரர்களும் பயிற்சியில் இறங்கியுள்ளனர். அதில், பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரானா வீசிய பந்தில் டோனி ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்சர் பறக்க விட்டார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

______________________________________________________________________________________________

மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் 

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. 

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 3 போட்டியில் மும்பை தாமதமாக பந்துவீசிய காரணத்தால் அணியின் கேப்டன்  பாண்டியாவுக்கு முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .

______________________________________________________________________________________________

விராட் கோலி குறித்து டி வில்லியர்ஸ்

ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது, விராட் கோலி கிரிக்கெட்டினை அனுபவித்து விளையாடுவதாக நினைக்கிறேன். அவர் பில் சால்ட்டுடன் விளையாடும்போது, அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையிருக்காது என நினைக்கிறேன். நாம் பார்த்ததிலேயே அதிரடியாக விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களில் ஒருவர் பில் சால்ட். விராட் கோலியின் மீதான அழுத்தத்தை பில் சால்ட் எடுத்துவிடுவார் என நினைக்கிறேன். பல ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டில் செய்து வருவதை தொடர்ந்தாலே போதுமானதாக இருக்கும். அவர் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். அவருக்கு எப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது தெரியும்.

கடந்த சில சீசன்களாக விராட் கோலியின் பேட்டிங்கின் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் அவரது ஆட்டத்தில் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவரும் மனிதர்தான். அவரது மனதில் சில சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், விராட் கோலி எப்போதும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முக்கியமான தருணங்களில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

______________________________________________________________________________________________

22-ம் தேதி பி.சி.சி.ஐ. கூட்டம் 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர உயர்மட்ட குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. போட்டிக்கான இடம், அட்டவணை எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கான இடத்தை தேர்வு செய்ய ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது. 

இதே போல் 2025-26-ம் ஆண்டு உள்ளூர் போட்டிக்கான அட்டவணையும் கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியின் போது, மதுபானம், புகையிலை சம்பந்தமான விளம்பரங்களை தடை செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை இந்திய கிரிக்கெட் வாரியத்தை அறிவுறுத்தியது. அது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து