முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க விஞ்ஞானி ஆனார் சுனிதா வில்லியம்ஸ்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      உலகம்
Sunita-Williams 2024-05-02

Source: provided

நியூயார்க் : விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க விஞ்ஞானி ஆனார் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் அமெரிக்காவை சேர்ந்த நாசா அமைப்பின் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவியாகவும், பரிசோதனை மேற்கொள்ளவும் சென்றனர். முதலில் 8 நாட்கள் பரிசோதனைக்காக சென்ற அவர்கள், பின்னர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கினர் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் உதவியுடன் நேற்று காலை பூமிக்கு திரும்பியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பாதுகாப்புடனும், உடல் நலத்துடனும் உள்ளனர் என மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த வீரர்கள் பலர் உள்ளனர். அந்த பட்டியலில் முதல் இடத்தில் ரஷிய வீரர்கள் உள்ளனர். அவர்களை தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.

ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரரான ஒலெக் கோனோனென்கோ 1,110 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார். அவரை தொடர்ந்து மற்ற ரஷிய வீரர்களான கென்னடி படல்கா (878 நாட்கள்), செர்கெய் க்ரிகலெவ் (803 நாட்கள்), அலெக்சாண்டர் கலேரி (769 நாட்கள்), செர்கெய் அவ்தெயெவ் (747 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அமெரிக்க விஞ்ஞானியான பெக்கி விட்சன் 675 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். அவருக்கு அடுத்து ரஷிய விண்வெளி வீரர்களான ப்யோடர் யுர்சிகின் (672 நாட்கள்), யூரி மாலென்சென்கோ (641 நாட்கள்) ஆகியோர் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் (609 நாட்கள்) உள்ளார். இதனால், விண்வெளியில் அதிக நாட்களை கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரிசையில் சுனிதா வில்லியம்ஸ் 2-வது இடம் பிடித்து உள்ளார்.

சுனிதா வில்லியம்சுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்றாக பணிபுரிந்த பேர்ரி புட்ச் வில்மோர் (462 நாட்கள்) விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 6-வது அமெரிக்க விண்வெளி வீரராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து