எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸின் கோரிக்கையை அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நிராகரித்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எஸ்க் சிஇஓ மஸ்க் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக இப்போதைய அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தங்கி இருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தில் திரும்பிய இருவரும் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் இறங்கினர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எஸ்க் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், "மற்றொரு விண்வெளி வீரரை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வந்ததற்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்கு அதிபர் ட்ரம்புக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விண்வெளி வீரர் சுனிதாவை முன்பே பூமிக்கு திரும்பி அழைத்து வரும் கோரிக்கையை முந்தைய அதிபர் ஜோ பைடன் நிராகரித்ததாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், விண்வெளி வீரர்களை முன்பே பூமிக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விண்வெளி வீரர்கள் அங்கு 8 நாட்கள் மட்டுமே தங்கி இருந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள் சுமார் 10 மாதங்கள் அங்கிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் இதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஸ்பேஸ் எக்ஸ் சில மாதங்களுக்கு முன்பே விண்வெளி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்து வந்திருக்க முடியும். நாங்கள் அந்தக் கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் முன்வைத்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கோரிக்கை நிகாரிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி மாதத்தில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், கடந்த 2024 ஜுன் முதல் விண்வெளியில் இருந்து வரும் விண்வெளி வீரர்களை விரைவில் பூமிக்கு திரும்ப அழைத்து வருமாறு அதிபர் தன்னிடம் கேட்டுக்கொண்டார்.
ஜோ பைடன் நிர்வாகம் அவர்களை இவ்வளவு நாள் அங்கே விட்டு வைத்தது கொடுமையானது” என்று தெரிவித்திருந்தார். இதனை அப்போது அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். அவர், “பைடன் நிர்வாகத்தினால் விண்வெளியில் கைவிடப்பட்ட துணிச்சலான இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும்படி, எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் கேட்டுள்ளேன். அந்தத் திட்டம் விரைவில் தொடங்கும்.”என்று தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை இயக்கம்
18 Mar 2025சென்னை: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: பிரதமர் மோடி குறித்து வைகோ கடும் விமர்சனம்
18 Mar 2025டெல்லி: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை பிக்னிக் மினிஸ்டர் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
-
பூமி திரும்பும் முன்பு சுனிதா வில்லியம்ஸ் நாசா வெளியிட்ட புகைப்படம்
18 Mar 2025அமெரிக்கா: பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
-
சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி
18 Mar 2025சுவிட்சர்லாந்த்: டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.
-
பாக். வம்சாவளி வீரர் மரணம்
18 Mar 2025லக்னோ அணிக்கு வாழ்த்து
-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா பெற சிறப்பு முகாம்
18 Mar 2025சென்னை: சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
-
இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்
18 Mar 2025குஜராத்: குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி
18 Mar 2025லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் சந்திப்பு
18 Mar 2025டெல்லி: இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் இருந்து மெஸ்ஸி விலகல்
18 Mar 2025பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை
18 Mar 2025வாஷிங்டன்: ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்கு டிரம்ப்-புதின் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
டி-20 மற்றும் ஒருநாள் தொடர்:வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
18 Mar 2025டாக்கா: டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
வங்கதேச அணி...
-
ஜப்பானில் எரிமலையேற்றத்துக்கு 2,300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
18 Mar 2025டோக்கியோ: ஜப்பான் பியூஜி எரிமலையேற்றத்துக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயத்துள்ளது.
-
பங்குச்சந்தை மோசடி வழக்கு: கவுதம் அதானி விடுவித்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
18 Mar 2025மும்பை: பங்குச்சந்தை மோசடி வழக்கு தொழில் அதிபர் கவுதம் அதானியை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-03-2025.
19 Mar 2025 -
மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்
18 Mar 2025ஜெய்ப்பூர்: இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.
-
இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல் மத்திய அரசு தகவல்
18 Mar 2025பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 294 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Mar 2025சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
-
பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்
19 Mar 2025சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள தி.மு.க.
-
தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்
19 Mar 2025சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.
-
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
19 Mar 2025கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
-
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
19 Mar 2025திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற
-
மறைந்த அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டிய தேவை என்ன? - வேல்முருகன் கேள்வி
19 Mar 2025சென்னை : அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன என்று தமீழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பெங்களூருவுக்கு ரூ.38 கோடி போதைப்பொருள் கடத்தல் : விமானநிலையத்தில் பெண் கைது
19 Mar 2025பெங்களூரு : ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் - மஸ்க்
19 Mar 2025வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.