முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      விளையாட்டு
India 2024 08 05

Source: provided

துபாய் : டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.

6 இடங்கள் சரிவு...

ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார். மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2 இடங்கள் முன்னேறி... 

நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார். பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார். நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அபிஷேக் சர்மா.... 

டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர். டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து