தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது தாக்குதல்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      தமிழகம்
Jail 2025-03-19

Source: provided

சென்னை : பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை படூர் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சஞ்சுராஜ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பேராசிரியை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சக பேராசிரியர்கள், பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சுராஜுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் அந்த பேராசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்தனர். மேலும் பெண் பேராசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து