முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் நேரில் பிரதமர் மோடி வலியுறுத்தல் : மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்கவும் ஒப்புதல்

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      உலகம்
Modi-1 2025-04-05

Source: provided

கொழும்பு : மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று அவர் கொழும்புவில், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "நாங்கள் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினோம். மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமரசம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

இலங்கை அரசு, தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்றும், அரசியலமைப்பினை நிறைவேற்றும் திசையில் செயல்படும் என்றும், கவுன்சில் தேர்தல் குறித்த அவர்களின் உறுதிமொழிகளை பூர்த்தி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுக்கு 10,000 வீடுகள் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.

உண்மையான நண்பன் மற்றும் நட்பை விட எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு தரும் கேடயம் வேறொன்று இருக்க முடியாது என்று தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதிபர் அனுர குமார திசநாயக்க தனது பயணத்துக்கான முதல் வெளிநாடாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். அவர் பதவியேற்ற பின்பு இலங்கைக்கு முதல் வெளிநாட்டு பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன். நமது நட்பின் சிறப்பினையும் ஆழத்தையும் இது வெளிப்படுத்துகிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பதிலும், சாகர் திட்டத்திலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு.

நான் இலங்கைக்கு வருவது இது நான்காவது முறை. கடந்த முறை மிக முக்கியமான காலகட்டத்தில் நான் இலங்கைக்கு வந்தேன். அப்போது இலங்கை மீண்டெழும், வலிமையாக மீண்டெழும் என்று நான் நம்பினேன். இன்று இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையான நண்பனாக நாங்கள் இலங்கையுடன் நின்றது எங்களுக்கு பெருமையளிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலோ, கரோனா பெருந்தொற்றோ அல்லது சமீபத்திய பொருளாதார நெருக்கடியோ நாங்கள் இலங்கை மக்களுடன் துணையாக நின்றிருக்கிறோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து