முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் பேட்டிங் சொதப்பல்: சென்னை ஹாட்ரிக் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      தமிழகம்
CSK 2024-03-11

Source: provided

சென்னை: வீரர்களின்  சொதப்பல் பேட்டிங் காரணமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து  ஹாட்ரிக் தோல்வியை சி.எஸ்.கே. அணி  பதிவு செய்தது.

டெல்லி பேட்டிங்...

ஐ.பி.எல். தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சி.எஸ்.கே.- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.

அபிஷேக் அசத்தல்...

டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது. 2ஆவது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் அபிஷேக் பொரேல்  ஜோடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ரன்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

அக்சார் படேல் 21 ரன்...

7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார். முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ரன்களுடனும், அக்சார் படேல் 20 ரன்களுடனும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ரன்னாக இருந்தது.

கே.எல். ராகுல் அரைசதம்...

4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ரன் குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன. 14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ரன்கள் கிடைத்தன.

ரிஸ்வி அவுட்...

16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ரன்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

கேட்சை தவற விட்ட சவுத்ரி... 

18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் ம்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த கேட்சை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.

183 ரன் குவிப்பு...

கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரனஅவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரனா, நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

தடுமாற்றம்...

இதையடுத்து, 184 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ரவீந்திரா (3), கெயிக்வாட் (5), கான்வே (13) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், பவர் பிளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஹாட்ரிக் தோல்வி...

தொடர்ந்து, துபே (18), ஜடேஜா (2) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால், 74 ரன்களுக்கே 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தோனி 11வது ஓவரிலேயே களமிறங்கினார். விஜய் ஷங்கரும், தோனியும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். இருப்பினும் சென்னை அணியால் வெற்றியை நெருங்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது. விஜய் ஷங்கர் 54 பந்துகளில் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

8வது இடம்...

இந்தப் போட்டியின் பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மும்பை (62/1), பெங்களூரு (30/3), ராஜஸ்தான் (42/1) ஆகிய அணிகளுக்கு எதிரான பவர் பிளேக்களிலும் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. இதன்மூலம், நடப்பு பிரீமியர் லீக் தொடரில் பவர் பிளேவில் குறைந்த பட்ச ரன்களை அடித்த அணியாக சென்னை மாறியுள்ளது. 7.4 ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 11.7 ரன்ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து