முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      தமிழகம்
Modi 2024-10-24

Source: provided

மதுரை : பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மதியம் 3.50 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்தநிலையில், பிரதமரின் வருகையையொட்டி, அவரது தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மதுரையில் விமான நிலையத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று முன்தினம் முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரதமர் டெல்லி செல்லும் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அன்றைய தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படும்.

இதுபோல், மதுரை விமான நிலையத்தில் யார்? யார்? பிரதமரை சந்திக்க உள்ளார்களோ அவர்களை வரிசைப்படுத்தி உரிய அனுமதி சீட்டுடன் அவரை சந்திக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்து விட்டு பிரதமர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து