முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் இந்தியர் குத்தி கொலை

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      உலகம்
Kattikkuttu-2025-1-15

Source: provided

ஒட்டாவா : கனடாவில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

கனடாவின் ஒட்டாவா நகரருகே ராக்லேண்ட் பகுதியில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இதுபற்றி இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், கத்தி குத்து தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான சோக சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என போலீசார் குறிப்பிட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு, உள்ளூர் கூட்டமைப்பு வழியே சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்க, நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும் தூதரக தகவல் தெரிவிக்கின்றது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு கவலை கொள்ளுமளவுக்கு தேவையேதும் ஏற்படவில்லை என ஒன்டாரியோ மாகாண போலீசார் தெரிவித்தனர். விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. வெளியிடுவதற்கு வேறு எந்த தகவலும் இல்லை என போலீசார் கூறினர் என்று சி.டி.வி. நியூஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து