முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி: பரிந்துரை கடிதங்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      இந்தியா
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி: திருப்பதி கோவிலில் பரிந்துரை கடிதங்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்களை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்ப மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்காக ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இனிமேல் பரிந்துரை கடிதங்களை https://cmotid telangana, gov. in இல் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்ட பிறகு அதை திருப்பதி தேவஸ்தான ஆன்லைனில் பதிவேற்றி அசல் கடிதத்தை பக்தர்களிடம் கொடுக்குமாறு முதல்வர் அலுவலக துணைத் தலைவர் பொதுப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதே உள்நுழைவு விவரங்களை தரிசன கவுண்டரிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒதுக்கீட்டை மீறி பரிந்துரை கடிதங்களை வழங்குவது. அவர்களுடன் சென்று பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற அனுபவங்களை தொடர்ந்து ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது பிரதிநிதிகள் திங்கள் முதல் வியாழன் வரையிலான வருகைகளுக்கு மட்டுமே பரிந்துரை கடிதங்களை வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு கடிதம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் கூடுதலாக தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது.

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தரிசனம்உண்டு. ரூ.300, தங்குமிட வசதி இல்லை. பக்தர்கள் அசல் பரிந்துரை கடிதத்துடன் செல்ல வேண்டும். ஆதார் அட்டைகள் இல்லாத குழந்தைகள் இருந்தால் அவர்கள் பிறப்புச் சான்றிதழுடன் செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் 66,327 தரிசனம் செய்தனர்.26,354 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து