Idhayam Matrimony

வெற்றி பாதைக்கு திரும்புமா ஐ.பி.எல். சென்னை அணி..? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

சென்னை : தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா? என்று ஆவலுடன்   ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஐ.பி.எல். தொடர்...

10 அணிகள் பங்கேற் றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22- ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

9-வது இடத்தில்... 

5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது. கவுகாத்தியில் விளையாடிய 3-வது போட்டியில் 6 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் நடந்த 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் 25 ரன்னில் வீழ்ந்தது. சி.எஸ். கே. 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

. 2-வது வெற்றிக்காக... 

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்சை இன்று (செவ்வாய்க்கிழமை) நியூ சண்டிகரில் (முலான்பூர்) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீளூமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

ருதுராஜ் ஒப்பனர்...?

சென்னை சூப்பர் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. 4 போட்டியிலும். 2-வது தான் பேட்டிங் செய்தது. இதனால் நாளை போட்டியிலாவது அணுகுமுறையை மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர் பிளேயில் ரன் குவிப்பது மிகவும் அவசியமாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.

சமபலத்துடன்...

பஞ்சாப் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் முறையே குஜராத் ( 11 ரன்), லக்னோவை (8 விக்கெட்) வீழ்த்தியது. 3- வது போட்டியில் ராஜஸ்தானிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

எதிர்பார்ப்பு...

முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமை யிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப் படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து