முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.65 ஆயிரம் கோடியில் கட்டுமானப்பணிகள்: மே மாதம் ஆந்திரா வருகிறார் பிரதமர்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      இந்தியா
Modi 2024 11 20

Source: provided

ஆந்திரா : ரூ.65 ஆயிரம் கோடியில் கட்டுமான பணிகளை திறந்து வைக்க அடுத்த மாதம் பிரதமர் மோடி ஆந்திரா வருகிறார்.

ஆந்திரா மாநிலம் அமராவதியில் ரூ.65 ஆயிரம் கோடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

அதன்படி பிரதமர் மோடி மே மாதம் 2-ந்தேதி மாலை 4 மணிக்கு அமராவதி வருகிறார். சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் நடந்து வருகிறது. இந்த விழாவில் குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம், மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆந்திர அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து