முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மொழிகளில் வெளியன இசை ஆல்பம் “மிஸ் மேல கிரஷ்”

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      சினிமா
Miss-Mela-Crush 2025-04-21

Source: provided

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் அஸ்வமித்ரா இயக்கத்தில் உருவான இசை ஆல்பம் “மிஸ் மேல கிரஷ்”. குழந்தை நட்சத்திரம் சித்தார்த் பன்னீர் இந்த ஆல்பத்தில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பாடல்களைப் பாடி, நடனமும் ஆடியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு நிகழ்வில் கவியரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த இசை ஆல்பத்தை வெளியிட்டனர்.

ஆல்பத்தின் இயக்குநரும் இசையமைப்பாளருமான அஸ்வமித்ரா விழாவில் பேசுகையில், இந்த ஆல்பத்தை தொடர்ந்து மேலும் மூன்று பாடல்களை வெளியிட உள்ளோம். சிலம்ப வித்தையில் நேஷனல் சாம்பியனான மாஸ்டர் சித்தார்த், சிலம்பம் தொடர்பான பாடலையும் அதில் இடம் பெறச்செய்திருக்கிறோம் என்றார். இதற்கடையே, மாஸ்டர் சித்தார்த் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து