முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்க்கத்துடன் செயல்படுகிறார்: கவர்னருக்கு துணை ஜனாதிபதி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Jagadeep 2024-12-10

Source: provided

ஊட்டி : கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கவர்னர்ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. கவர்னர்தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:- கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறை அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது என்பது அவசியம். கல்வியால் தான் நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளேன். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். பயங்கரவாதம் உலகளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கவர்னர்ஆர்.என்.ரவியின் முயற்சியை பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களின் பிரச்சனைகளை அறிந்து அவற்றை களைவதற்கு துணை வேந்தர்கள் மாநாடு உதவும். கவர்னராக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை கவர்னர்ஆர்.என்.ரவி தீவிரமாக கடைபிடிக்கிறார்.  கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார். எவ்வித தடையும் இல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து