முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று போப் இறுதிச்சடங்கு: பங்கேற்க வாடிகன் சென்றார் : ஜனாதிபதி திரெளபதி முர்மு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      இந்தியா
Murmu-2025-04-25

புதுடில்லி, கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கை புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு (உள்ளூா் நேரம்) நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா சார்பில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தில்லியில் இருந்து வாடிகனுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனிடையே, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டு அன்றைய தினம் நாடு முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து