முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித்தின் பார்ம் பற்றி கவலைப்பட தேவையில்லை: பாண்ட்யா நிம்மதி

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      விளையாட்டு
Hardik-Pandya 2023 08 02

Source: provided

மும்பை : ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலை கொள்ள அவசியமே இல்லை என மும்பை கேப்டன் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் மும்பையில்  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

நிம்மதியாக இருந்தது...

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் மும்பை கேப்டன் பாண்ட்யா கூறியதாவது, நாங்கள் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது, இது அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும்  விளையாடும் விதத்தை பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக இருந்தது.

கவலை வேண்டாம்...

ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால், இவர் இப்படி ஒரு இன்னிங்சை கண்டிப்பாக விளையாடுவார் என்று எங்களுக்கு தெரியும். ரோகித் சர்மா அதிரடியை காட்டினால் எதிரணி நிச்சயம் தோல்வி காணும் என்பது எங்களுக்கு தெரியும். ரோகித் சர்மாவுக்கு தகுந்த மாதிரி சூர்யகுமாரும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

எளிமையான கிரிக்கெட்...

ரோகித் - சூர்யகுமார் அமைத்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தையே எங்கள் பக்கம் கொண்டு வந்தது. நாங்கள் அடிப்படையை பின்பற்றுகிறோம். நாங்கள் எளிமையான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். போட்டியை பார்க்கும் போது, வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர். ஆனால், இன்னிங்ஸ் முடிவில் அது சராசரியான ஸ்கோர் தான். ஒரு நல்ல போட்டியை விளையாடுவது வெகு தூரத்தில் இல்லை. எனினும் இன்றைய ஆட்டத்திலும் சில தவறுகளை செய்தோம். அதனை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து