முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பா.ஜ.க. எம்பி நிஷிகாந்த் துபே சமீபத்தில் கூறிய கருத்துக்கு எதிரான மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அமர்வு முன்பு வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா கூறுகையில், “நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் அதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியே பொறுப்பு என நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது மிகவும் தீவிரமான விஷயம்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை அடுத்தவாரம் விசாரணைக்காக பட்டியலிட உத்தரவிட்டது. முன்னதாக திங்கள்கிழமை துபேவின் கருத்துக்களுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று தெரிவித்திருந்தது.

“சுப்ரீம் கோர்ட் சட்டங்களை இயற்றினால் பாராளுமன்றத்தை மூடிவிடலாம்.” என்று பா.ஜ.க. எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மக்களவைத் தொகுதி எம்.பி. சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சுப்ரீம் கோர்ட் சட்டங்களை இயற்றினால் பாராளுமன்றத்தை மூடிவிடலாம். நீதிபதிகள் ஒருபோதும் சட்டம் இயற்றும் பாராளுமன்றவாதியாக முடியாது. இன்றைய சூழலில் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். நாட்டின் மதரீதியிலான போரை சுப்ரீம் கோர்ட் தூண்டி வருகிறது. தனது எல்லை வரம்பை தாண்டி சுப்ரீம் கோர்ட் செல்கிறது. எல்லாவற்றுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால் பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் எதற்கு? அவற்றை இழுத்து மூடிவிடலாம்.” என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து