முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      இந்தியா
Modi 2023-09-11

Source: provided

புதுடெல்லி : "சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது. சமீப காலங்களில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மூலோபாய ஆழத்தையும் உத்வேகத்தை பெற்றுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நேற்று கிளம்பிச் சென்றார். பயணத்துக்கு முன்பாக பிரதமர் மோடி கூறியதாவது: "பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் சவுதி அரேபியாவுக்குச் செல்கிறேன். சமீப ஆண்டுகளில் மூலோபாய ஆழத்தையும், உத்வேகத்தையும் பெற்றுள்ள சவுதி அரேபியாவுடனான நீண்டகால வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.

நாங்கள் ஒன்றாக இணைந்து பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளோம். பிராந்திய அமைதி, வளமை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவைகளில் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பகிர்ந்துள்ளோம்.

கடந்த பத்தாண்டுகளில் இது எனது மூன்றாவது சவுதி அரேபிய பயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான ஜெத்தாவுக்கு முதல் பயணமாகும். எனது சகோதரர் இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2023 வெற்றிகரமான இந்திய பயணத்தின் அடிப்படையில் 2வது மூலோபாய கூட்டாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவும், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையோன உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பினைச் செய்வதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மேலும், இரண்டு நாடுகளுக்கு இடையே வாழும் இணைப்பு பாலமாகவும், கலாச்சாரம் மற்றும், மனித உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்து வரும் சவுதி அரேபியாவில் வசிக்கும் துடிப்பான இந்தியச் சமூகத்தினரை சந்திக்கவும் ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து