முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
ADMK 2025-04-18

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.  

அ.தி.மு.க. மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கடலூர் சாலை தற்காலிக பேருந்து நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. இன்னும் திறக்கப்படாததால் நேற்று தற்காலிக பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: தற்போது சுமார் 33 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.  பேருந்து நிலையம் விரிவாக்கம் முடிவடைந்து கடந்த 4 மாதங்களுக்கு முன் நகராட்சியிடம் பேருந்து நிலையம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிகமாக இயங்கும் பேருந்து நிலையத்தால் மக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு தினசரி வரும் பயணிகள் வசதிக்காக கழிப்பறைகள் கூட இல்லை. தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படும் புழுதிகாற்றினால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.

இது சம்பந்தமாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பொறுப்பற்ற முறையில் உள்ளனர். உண்மை நிலையை முதல்வர் உணர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை அழைத்து பேசி கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து