முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்வேயின் தந்தை காலமானார்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK 2024-03-11

Source: provided

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வீரர் டெவான் கான்வேயின் தந்தை உயிரிழந்தார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டெவான் கான்வே ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் இருப்பவர்.

இந்தநிலையில், அவரது தந்தை டெண்டான் மறைவைத் தொடர்ந்து அவர் நியூஸிலாந்துக்கு திரும்பியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கான்வேயின் குடும்பத்தார் நியூஸிலாந்துக்கு குடி பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெவான் கான்வேயின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ்(சி.எஸ்.கே.) அணி வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கறுப்பு நிற ரிப்பன் அணிந்திருந்தனர்.

________________________________________________________________________________________________________________

இந்திய அணி ஆஸி. பயணம்

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கெதிராக 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி  ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. ஏப்ரல் 26, 27 மற்றும் மே 1-ம் தேதிகளில்  ஆஸ்திரேலியா ஏ அணியையும், மே 3, 5-ம் தேதிகளில்  ஆஸ்திரேலியா அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளன.

________________________________________________________________________________________________________________

பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பு 

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் நதீம் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து