முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி சாதனைகளை முறியடித்த ரோகித்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      விளையாட்டு
Roger-Federer 2023 07-16

Source: provided

மும்பை :  சி.எஸ்.கே.வுக்கு எதிரான  போட்டியில் கோலி, தவான் சாதனைகளை ரோகித் சர்மா முறியடித்தார். 

ரோகித் சர்மா 77... 

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. ரோகித் சர்மா 77 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

அதிக ஆட்டநாயகன்...

இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த பட்டியலில் மும்பை அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது. இப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் ஐ.பி.எல். தொடர் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 

விராட் கோலியை முந்தி... 

முன்னதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 19 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 20-வது முறை இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார். அதேசமாயம் ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.  இப்போட்டியில் ரோகித் சர்மா 76 ரன்களை எடுத்ததன் மூலம், ஐ.பி.எல். தொடர் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த 2-வது வீரர் எனும் சாதனையை படைத்துள்லார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து