முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதம் வேண்டாம்: காஷ்மீரில் கல்லூரி மாணவிகள் பேரணி

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதுமே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) சம்பவம் நடந்த அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் கையில் பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்ட இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஜம்மு-காஷ்மீரில் அமைதி வேண்டும் என்று மாணவிகள் கையில் பதாகைகளை வைத்திருந்தனர். 

பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் அவர்கள் பஹல்காமில் இந்துக்களை மட்டுமே கொன்றதாகவும் சில தவறான தகவல்கள் பரப்பப்படும் நிலையில் இரு மதத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும் இந்த மாணவிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து