முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

சென்னை : அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகியுள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு தயார்படுத்துதல், பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல்முறையாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டுள்ளது.

சமீபமாக எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்த நிலையில்,  சட்டப்பேரவையில் பேசிய செங்கோட்டையன், 'எடப்படியாரை வணங்கி...' என்று தொடங்கிப் பேசினார். இதையடுத்து இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதற்கு முந்தைய நாள் அ.தி.மு.க. விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து நேற்று அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்றுள்ள செங்கோட்டையன், இபிஎஸ்ஸுக்கு எதிர் வரிசையில் முதலாவதாக அமர்ந்திருக்கிறார். கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, உதயகுமார், வேலுமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து