முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டை சேர்ந்தவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      இந்தியா
Jail

Source: provided

வாராணாசி : வாராணாசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டிகோ விமானம் சனிக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானம் முழுமையான ஆய்வுக்காக உடனே தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் வெடிக்கும் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்தார். இதுதொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு புறப்பட்டது. இதனால் வாராணசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து