எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவண்
கவண்
கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment)நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக வெளிக்கொண்டுவரும் புதிய படத்தின் இயக்குநர் திரு கே.வி. ஆனந்த். இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார்.
நேயர்கள் பெருமளவில் தங்கள் யூகங்களைக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனமும், இயக்குநர் கே.வி. ஆனந்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண். மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக பங்கேற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரு. டி. ராஜேந்தர், வெள்ளித்திரையில் தனக்கே உரிய பிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார்.
மடோனா செபாஸ்டின், விக்ராந்த்,பாண்டிய ராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களிக்கின்றனர். கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. இளமை ததும்பும் ஐந்து பாடல்களை வழங்குகிறார் ஹிப் ஹாப் தமிழா. அதிலும் குறிப்பாக டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும்.
கே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள். தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து, நிறைவடையும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.நவம்பரில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கும்.
AGS PRODUCTION 18
முக்கியத் தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் K V ஆனந்த்
இசை ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம்
கதை, திரைக்கதை K V ஆனந்த், சுபா , கபிலன் வைரமுத்து
வசனம் சுபா, கபிலன் வைரமுத்து
படத்தொகுப்பு ஆண்டனி
கலை DRK கிரண்
நடனம் பிருந்தா , ஷோபி , பாபா பாஸ்கர்
சண்டைப் பயிற்சி திலிப் சுப்புராயன்
ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ்
ஒப்பனை A R அப்துல்
புகைப்படம் மோதிலால்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்
தயரிப்பு மேலாளர்கள் S R லோகநாதன், D சரவணக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் S M வெங்கட் மாணிக்கம்
தயாரிப்பாளர்கள் கல்பாத்தி S அகோரம்
கல்பாத்தி S கணேஷ்
கல்பாத்தி S சுரெஷ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.