முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி செலுத்துவோர் வங்கிகளில் செலுத்தலாம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, பிப்.21 - மார்ச் மாத கடைசியில் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகம் தவிர தமிழகத்திலுள்ள வங்கிகளில் பணமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான வங்கிகள் பட்டியலையும் அது அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு. மார்ச் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரி செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்தைப் பெறுவதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி அதிகநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க  வேண்டியுள்ளது. இதிலுள்ள சங்கடங்களை தவிர்க்கும் பொருட்டு, நகரத்திலுள்ள வரிசெலுத்துவோர் நலனை கருத்தில் கொண்டு கடைசிநேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு வெகு முன்னதாகவே அவர்கள் வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம். இந்திய ரிசர்வ் வங்கி தவிர, தமிழகத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட பின்வரும் பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பணமாகவோ காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவான்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்,ஸ்டேட் பாங்க் ஆஃப் பாடியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா,பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்போரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் வங்கி ஆஃப் இந்தியா,யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி,ஐசிஐசிஐ வங்கி,ஐடீபீஐ வங்கி, எச்டீஎஃப்சீ வங்கி வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு ரிசர்வ் வங்கி செய்திகுறிப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago