முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை: இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 15 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இந்தியா,இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் களம் இறங்கி உள்ளன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான நிலையில் உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் லீக்ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதவேண்டும். லீக் ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். மற்ற 2 அணிகளும் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். 

கடந்த 11 -ம் தேதி நடந்த முதல் ஆட்ட த்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பின்பு 13 -ம் தேதி நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை  அணிகள் மோதின. இதில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற் றும் இலங்கை அணிகள் இன்று நடக்க இருக்கும் 3 -வது லீக் ஆட்டத்தில் மோ த ஆயத்தமாகி வருகின்றன. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் இந் தியாவிடம் தோற்றது. 

எனவே இன்றைய போட்டியில் பாகி ஸ்தான் அணி முதல் வெற்றி பெற்ற தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இலங்கை அணி நெருக்கடியுடன் போட்டியில் பங்கேற்கிறது. முன்னதாக நடந்த முதல் லீக்கில் பாகி ஸ்தான் கடும் போராட்டத்திற்குப் பின் தான் வங்கதேசத்தை வீழ்த்தியது. எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சவாலை அந்த அணி சந்திக்க வேண்டி இருக்கும். இலங்கை அணி சமீபத்தில் ஆஸ்திரேலி யாவில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் போராடி தோல்வி அடைந் தது. 

இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர் த்தனே, தில்ஷான், சங்கக்கரா, சண்டி மால், தரங்கா மற்றும் குலசேகரா ஆகி யோர் நல்ல பார்மில் உள்ளனர். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே மிர்பூரில் இன்று நடக் க இருக்கும் லீக் போட்டி இந்திய நேர ப்படி பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்