முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காங்., ஆட்சியை பிடிக்க 45 ஆண்டுகளாகும்..!

புதன்கிழமை, 17 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

உதகை, அக். 17 - தமிழக காங்கிரசில் இருப்பவர்கள் அனைவருமே தலைவர்கள் என்பதால் இன்னும் 45 ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறினார். உதகையில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியின் விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 

உலக பொருளாதார சூழல் மோசமான நிலையில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி விகிதம் பூஜ்யமாகவே உள்ளது. அமெரிக்காவிலும் கவலைக்கிடமான நிலையே உள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக 6 முதல் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ள நாடு இந்தியா மட்டுமே. பொருளாதார சிக்கல்,  வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் குழப்பம், மக்கள் தொகை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாராட்டும் வகையிலேயே உள்ளது. இதற்கு காரணம், நமது நாட்டை வழி நடத்துபவர்களுக்கு அரசியல் ஞானம் குறைவாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி குறித்த விஞ்ஞானம் அதிகளவில் தெரிந்துள்ளது. 

இந்தியாவில் அந்நிய முதலீடு திட்டத்துக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதற்கு முந்தைய குற்றச்சாட்டுகளான 2 ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல் பிரச்சினைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது யாருக்குமே நினைவில்லை. புதிதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளால் பழைய குற்றச்சாட்டுகள் வலுவிழந்து விடுகின்றன. சல்மான் குர்ஷித் நேர்மையானவர். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. ஊழலை எதிர்ப்பதாக கூறி வரும் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் நகைப்புக்குரியவை. அவர் பா.ஜ.க.வின் கைப்பாவையாகவே செயல்படுகிறார். 

லோக்பால் மசோதாவால் மட்டும் நாட்டில் ஊழலை ஒழித்து விட முடியாது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடத்தில்தான் ஏற்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும், தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து ராகுல்காந்திதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. தமிழக காங்கிரசில் உள்ளவர்கள் அனைவருமே தலைவர்கள் என்பதால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு ஆட்சியை இழந்த 45 ஆண்டு காலமே மீண்டும் தேவைப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago