முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி : சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
ADMK 11-04-2025

Source: provided

சென்னை : வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க. - பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அ.தி.மு.க. தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறியது: “பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அ.தி.மு.க. -பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும். இதை அறிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு.

இந்த கூட்டணி, தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழக அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் செயல்படும். 1998 முதல் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி இருந்து வருகிறது. இது ஒரு இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலத்தில் இந்த கூட்டணி தமிழகத்தில் பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 39 இடங்களில் 30 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. நாங்கள் இணைந்துதான் இங்கே ஆட்சி அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடைபெற போகிறது. எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி இருக்கும். வெற்றி பெற்ற பிறகு மற்ற விஷயங்களை நாங்கள் சொல்கிறோம். இப்போது எவ்வித குழப்பத்தையும் திமுக ஏற்படுத்த நாங்கள் வாய்ப்பளிக்க மாட்டோம்.

‘எந்த நிபந்தனையும் இல்லை’ - கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. நிபந்தனை ஏதும் விதித்துள்ளதா என கேட்கிறீர்கள். அ.தி.மு.க. எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அ.தி.மு.க. ஒன்றிணைய அழைப்பு விடுப்பீர்களா என கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க. வருவது இருவருக்குமே வெற்றியைத் தரும். யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் வெற்றி பெற்ற பிறகு எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பதும் பிறகு பேசப்படும். இப்போது அது பேசுபொருளாக இல்லை என்று அமித் ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து