முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி : 2026ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கலை, இலக்கியம், இசை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கும். 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://awards.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் தேதி விண்ணப்பிக்க, பரிந்துரை செய்ய கடைசி நாளாகும்.

1954ஆம் ஆண்டில் இருந்து பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டின் குடியர தினத்தன்று அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியால் வழங்கப்பட்டு வருகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து