முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வேலையா.? பணமா.? - ரூ.4 கோடி பரிசை தேர்வு செய்த வினேஷ் போகத்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      விளையாட்டு
Vinesh-Bhogat-2024-09-07

Source: provided

சண்டிகர் : மல்யுத்த வீராங்கனையாக இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக மாறிய வினேஷ் போகத், பா.ஜ.க. தலைமையிலான ஹரியானா அரசு வழங்கிய ரூ.4 கோடி ரொக்கப் பரிசை தேர்வு செய்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ...

பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதலாக உடல் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மன வேதனையில், அவர் மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெற்ற நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்த வினேஷ், ஹரியானா பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரூ. 4 கோடி தேர்வு...

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்திருந்தார். மாநில விளையாட்டுக் கொள்கையின் கீழ் ரொக்கப் பரிசு, வீடு அல்லது குரூப்-ஏ அரசு வேலை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில், அவர் ரூ. 4 கோடியைத் தேர்வு செய்துள்ளார்.

போகத்துக்கு சலுகைகள்... 

ஹரியானா ஷெஹ்ரி விகாஸ் பிரதிகரன் என்ற திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாநில அமைச்சரவை அதன் விளையாட்டுக் கொள்கையின் கீழ் போகத்துக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே ஹரியானா மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கை மிகவும் தாராளமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து