முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலை. டாக்டர் பட்டம்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      உலகம்
Murmu2024-06-27

Source: provided

நித்ரா : ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது

ஜனாதிபதி திரெளபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார். பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி, அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும் நிர்வாகம், சமூக நீதிக்கு குரல் கொடுத்தல் மற்றும் உள்ளடக்கிய பணிகளுக்காக இந்தப் பட்டத்தை வழங்கியதாக பல்கலைக்கழகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, 'தத்துவ ஞானி செயிண்ட் கான்ஸ்டன்டைன்சிரிலின் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தில் பட்டம் பெறுவது, மொழி, கல்வி மற்றும் தத்துவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அவர், கல்வி என்பது தனிநபர் அதிகாரமளிப்புக்கு மட்டுமின்றி, தேசிய வளர்ச்சிக்கும் ஒரு வழிமுறை என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து