முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாணவி விவகாரம்: பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
10th-Exam 2023-04-06

Source: provided

கோவை : மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர்  உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா செங்குட்டுப் பாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 5-ந் தேதி பூப்பெய்தி உள்ளார்.  இதையடுத்து கடந்த 7-ந் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் அமர செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குனர் வடிவேலும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மாணவியின் பெற்றோரிடம் பேசிய அதிகாரிகள் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து